BSNLல் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. எப்போதும் வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாமதப்படுத்தப்படுகிறது.
BSNL ஊழியர்களை துன்புறுத்துவதற்கான சூழலை, இந்த அரசாங்கமும், DoTயும், BSNL நிர்வாகமும், ஒரு உள்நோக்கத்துடனேயே உருவாக்கிக் கொண்டு வருகின்றன. ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்வதை கட்டாயப்படுத்தும் சதியின் ஒரு பகுதி தான் இது என்பதை நாம் நம்புவதற்கு எல்லா காரணங்களும் உண்டு.
எனவே, ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, 03.09.2019 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என நமது மத்திய சங்கம் (மட்டும்) அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, மாவட்ட சங்கம் சார்பாக, இன்று, (03.09.2019) ஆத்தூர் தொலைபேசி நிலையத்திலும், நாமக்கல் கிளைகள் சார்பாக நாமக்கல் தொலைபேசி நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
ஆத்தூர்
நாமக்கல்