Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, September 15, 2019

வாழ்வு காக்க வாக்களீப்பீர்!


பேரன்புமிக்க வாக்காள தோழர்களே! வணக்கம்!! 

16.09.2019, திங்கள் அன்று 8வது சரிபார்ப்பு தேர்தல் நடைபெறவுள்ளதை தாங்கள் அறிவீர். ஜனநாயக மான்பை உயர்த்தி பிடிக்கும் நோக்கோடு, ரகசிய வாக்கெடுப்பு முறை பின் பற்றப்படுகிறது. BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதும், நிதி ஆதாரத்தை உயர்த்தி பிடிப்பதும் இன்றைய அவசிய அவசர தேவை என்பதை தாங்கள் அறிவீர்கள். ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் பெற்று பேறவேண்டியதும் சங்கங்களின் உடனடி கடமையாகும்.

தனியார்மய, பங்கு விற்பனை முடிவுகளை தடுப்பதும், நிறுவனத்தை லாபாமீட்டும் நிறுவனமாக மாற்றுவதும் நம் முன் உள்ள சவால்கள். அரசாங்கம் திட்டமிட்டு, VRS , ஓய்வு பெறும் வயதை குறைப்பது என பல மோசமான திட்டங்களை முன்மொழிந்து நம்மை குழப்பி, வருகிறது. 

இத்துணை சவால்கள் மத்தியில், 8வது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள, கொள்கை ரீதியாக இயங்கக்கூடிய சங்கம் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக வரவேண்டும். அந்த தகுதி, BSNLEU சங்கத்திற்கு மட்டும் தான் உள்ளது என்பதை அறிவீர்கள். 

கடந்த காலங்களில், நிறுவனத்தை காக்க எண்ணற்ற ஒன்று பட்ட போராட்டங்களை நடத்திய வெற்றி வீரன் தான் BSNLEU சங்கம். 
30 சதவீத சம்பள உயர்வு, பயன்ற்ற OTBP/BCR திட்டங்களை ஓழித்து, அனைவரையும் மகிழ்வித்த NEPP பதவி உயர்வு, Attender உள்ளிட்ட பிரியோஜனமற்ற NFTE முன் மொழிவுகளை நிராகரித்து, Telecom Technician, Junior Engineer, உள்ளிட்ட மேம்பட்ட பெயர்களை பெற்று கொடுத்து, விடுபட்ட போனஸ், பதவி உயர்வு தேர்வுகளில் பல சலுகைகள், BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், போட்டி தேர்வு மதிப்பெண்களிள் SC /ST ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள்  என நாம் சாதித்தவை ஏராளம்.

மாறாக, களத்தில் உள்ள இரண்டாவது சங்கம், சொசைட்டி என்ற சிறிய அமைப்பை கூட சரிவர நிர்வகிக்காமல், ஊழல் புரிந்து, அதிகாரம் கிடைத்தும் காக்க முடியாமல் அழிவு பாதைக்கு அழைத்து சென்றது தான் இன்றைய உட்சபட்ச வேதனை.  2014 RGB தேர்தல் மூலம் சொசைட்டி நிர்வாகத்தை முழுவதுமாக கபளீகரம் செய்து, உறுப்பினர் அனுமதி இல்லாமல் சொசைட்டி நிலங்களை விற்று, சொசைட்டியில் சாதாரண கடன் கூட கிடைக்காமல் செய்தது தான் அவர்களின் சாதனை. 

இன்று நாம் அனுபவிக்கும் இத்துணை இன்னல்களுக்கும், 01.10.2000ல் அற்ப தொகை ஆயிரம் ரூபாய்க்கு நம்மை அடமானம் வைத்த தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது, மறுக்க முடியாது.

போராடி பெற்ற சலுகைகள் தொடர, நிறுவனத்தை வளமாக்க, ஊழியர் நல கோரிக்கைகளை வென்றிட, 16.09.2019 அன்று வரிசை எண் 8ல், செல்போன் சின்னத்தில் வாக்களித்து BSNLEU சங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்