Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, September 15, 2019

வாக்காளர்கள் சிந்தனைக்காக!

BSNLEU நிறுவனத்தில் அசைக்கமுடியாத முதன்மைச்சங்கமாக தொடர்ந்து நீடித்து வருவது நமது BSNLEU ஊழியர் சங்கம் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே. பல்வேறு சூழல்களில் அரசும் நிர்வாகமும் தொடர் நெருக்கடிகள் தந்தபோதெல்லாம் நிறுவனத்தையும் ஊழியர் நலன்களையும் BSNLEU மீட்டெடுத்து வந்திருக்கிறது என்பது கண்கூடு. 
இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்த அரசும் இந்த நிர்வாகமும் திட்டமிட்டு  துடித்துக்கொண்டிருக்கிறது. தொழிற்சங்கத்தின் மீது ஊழியர்களுக்கு அதிருப்தியை உருவாக்கி தனது VRS/CRS போன்ற தனது சதிவேலைகளை எப்படியாவது சாதித்துக்கொள்ளலாம் என தீட்டிய பல திட்டங்கள் செல்லாமல் போகவே தனது வேறொரு ஆயுதமாக சம்பள தாமதம் என்ற புதிய நெருக்கடியை உருவாக்கியது. சம்பள தாமதத்தை உடனே நீக்கி சம்பளம் வழங்க வேண்டுமென  BSNLEU சங்கம் CMD உட்பட உயர்மட்டத்திலுள்ள அனைவரிடமும் வலியுறுத்தி வந்ததோடு நமக்கு முறையாக சேரவேண்டிய, முறைகேடாக நம்மிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை திருப்பி அளிக்கும்படி கேட்டும், வேண்டுமென்றே இன்றுவரை தாமதம் செய்துகொண்டு வருகிறது நிர்வாகம்.

அது மட்டுமல்லாமல் உடனடியாக ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கக்கோரி கடந்த 03.9.19 அன்று  AUAB சார்பில் மற்ற சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தும்  NFTE/ FNTO/ TEPU உட்பட்ட சுய நலச்சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் BSNLEU கடந்த 03.9.19 சம்பளம் வழங்க கோரி போராட்டம் நடத்தியது. 
NFTE/FNTO/TEPU சங்கங்கள் தனியாக எந்த போராட்டமும் நடத்தவுமில்லை, அவர்கள் ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த போராட்டத்தையும் இதுவரையிலும் முன்னெடுக்கவும் இல்லை.

இந்த சூழலில் அரசு இயந்திரம் BSNLEU தொழிற்சங்கத்தின் மீது ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே நீண்ட நாட்களுக்கு சம்பளத்தை முடக்கி வைத்தது. 
ஆனால் நமது தொடர் பேச்சுவார்த்தையால் இப்போது இந்த மாதம் 18 -20 தேதிக்குள் சம்பளம் தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. 

சம்பள தாமதத்தில் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஊழியர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் ஒரு திட்டமிட்ட சதியே.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சமரசமற்ற தனது போராட்டங்களை அரசுக்கும் நிர்வாகத்துக்கும் எதிராக நடத்தி பறிக்கப்படும் உரிமைகள் அனைத்தையும் நிச்சயம் பெற்றெடுத்து தரும் என்பதில் யாரும் எந்த ஐயமும் கொள்ளவேண்டாம்.

நமது சங்கத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பரப்பி விட்ட திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்களை ஊழியர்கள் புறம் தள்ளிவிட்டனர் என்பதை பிரச்சாரத்துக்கு செல்லுமிடமெல்லாம் காணமுடிகிறது. இதுதான் நமது சங்கத்தின் பலமும் ஊழியர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஆதாரமுமாகும். BSNLEU சங்கம் மட்டுமே ஊழியர்களுக்கான அதிக பட்ச உரிமைகளையும் தேவைகளையும் நிறைவாக பெற்றுத்தருவார்கள் என அளவுகடந்த நம்பிக்கை ஊழியர்களுக்கு எப்போதும் உள்ளது என்பதை இன்று வரை எல்லாவிதமான சூழல்களிலும் காண முடிகிறது. இனி வருங்காலத்தை எதிர்கொண்டு, அரசின், நிர்வாகத்தின் சதிகளை முறியடிக்க நம்மைவிட்டால் மாற்று எதுவுமில்லை என்றே கூறலாம்.  

8வது ஊழியர் சரிபார்ப்பு  தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்  கடந்த கால போரட்டங்களையும் அதன்மூலம் BSNLEU ஊழியர்களுக்கு  பெற்று தந்த பலன்களையும் இன்று அனைத்து சங்கத்தோழர்களும் அருள் கூர்ந்து எண்ணிப்பார்த்தல் அவசியம். 
அதற்கு ஆதாரமாய் நம் ஒவ்வொருவரின்  பத்தாண்டுகால சம்பள ரசீதை நாம் எடுத்துப்பார்த்தாலே தெரியும் நாம் எந்த அளவிற்கு சம்பளத்தை உயர்வாய் பெற்றிருக்கிறோம் என்பதையும் தெளிவாய் அறிந்துகொள்ள முடியும்.

எனவே வாக்காள தோழர்களே!. நாம் பெற்றுத்தந்த பலன்கள் முழுவதற்கும் காரணம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமே என்பதை இந்த நேரத்தில் நாம் உறுதியாய் கூறிக்கொண்டு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சாதனைகள் சிலவற்றை உங்கள் முன் வைக்க கடமைப்பட்டுள்ளோம்:

முதல் சம்பள மாற்றத்தில் point to point fixation பெற்று தந்தது BSNLEU.

2வது ஊதிய மாற்றத்தின் போது  10% உயர்வு போதுமென்று  NFTE/ FNTO  தலையாட்டி நிற்க இறுதிவரை போராடி 30% ஊதிய உயர்வு பெற்றது BSNLEU.

CDA விலிருந்து IDA விகிதத்தில் அரசுப் பென்சனை உத்தரவாதப்படுத்தியது BSNLEU

33 ஆண்டுகள் சேவைக்காலம் என்பதை மாற்றி
20 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலே முழுபென்சன் என மாற்றியது BSNLEU.

16-26 ஆண்டு OTBP/BCR என்ற பழைய பஞ்சாங்க பதவி உயர்வை மாற்றி NEPP யால் 4, 7 , 8 , 8  ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்றுத்தந்தது BSNLEU  

இன் முகத்துடன் கூடிய இனிய சேவை திட்டத்தில் வாடிக்கையாளரை உயர்த்தியது BSNLEU

புதிய JE மற்றும் TT  பதவிகளை உருவாக்கி பதவி உயர்வுக்கு வித்திட்டது BSNLEU

TTA (JE) ஊதிய விகிதத்தை மாற்றியமைத்தது BSNLEU

தேர்வுபெறாத 40% JE (TTA)  க்களை சப்ளிமெண்டரி தேர்வில் தேர்ச்சியடையச்செய்தது BSNLEU

பிராட்பேண்ட் சேவையில் ஊழியர்களுக்கு சலுகை பெற்றுத்தந்தது BSNLEU

ஊழியர்களின் சலுகை தொலைபேசியில் ஒன் இந்தியா வசதி மற்றும் ஃப்ரீ கால் பெற்றுத்தந்தது BSNLEU

ஓய்வு பெற்றவர்களுக்கும் இலவச தொலைபேசி பெற்றுத்தந்தது BSNLEU

பொதுத்துறை வரலாற்றில் பத்து வருடங்களில் ஆறு மடங்காய் ஊதிய உயர்வு பெற்றுத்தந்த ஒரே சங்கம் BSNLEU

புதிய ஊதியத்தில் லீவ் என்காஷ்மெண்ட் பெற்றுத்தந்தது BSNLEU

முன்பு TSM ஆக இருந்து 01.01.2000 பின் நிரந்தரமான RM க்கு EPF என்பதை மாற்றி GPF ஆகவே தொடர வைத்தது BSNLEU.

JTO பதவியில் 35% பழைய ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்தது BSNLEU

TM (TT) காலியிடங்களை உடனடியாக நிரப்பியது BSNLEU

இறந்தவரின் வாரிசுகளுக்கு பணி வழங்க நடவடிக்கைகள் எடுத்தது BSNLEU

விழாக்கால முன் பணம் 5000/- என உயர்த்தி பெற்றுத்தந்தது BSNLEU

பொதுத்துறை வங்கிகளில் உடனடி கடன் வசதிகள் வாங்கி கொடுத்தது BSNLEU

பயன் தரும் புதிய இன்சூரன்ஸ் திட்டம் பெற்றுத்தந்தது BSNLEU 

வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடத்திற்கு மாற்றியது BSNLEU

ஓய்வு ஊதிய பலன்கள் உடனடியாக செட்டில்மெண்ட் செய்ய வைத்தது BSNLEU

நேரடி BSNL ஊழியர்களுக்கு EPF பங்களிப்பு உயர்த்தி பெற்றுத்தந்தது BSNLEU

விளையாட்டு வீரர்கள் பணி நியமனங்கள் செய்தது BSNLEU 

தொழிற்சங்க பாதுகாப்பை உறுதி செய்தது BSNLEU

OS / JE / TT / ATT என கெளரவமான பெயர் மாற்றம் பெற்று தந்தது BSNLEU.

அடிப்படைச் சம்பளத்தில் 3% இண்கிரீமெண்ட் வாங்கித்தந்தது BSNLEU

கடைசி மாத சம்பளம் / பத்து மாத சம்பள ஆவரேஜ் இதில் எது அதிகமோ
அதில் பென்ஷனை பெற்றுக்கொடுத்தது BSNLEU

கிராஜுவிட்டி உச்சவரம்பு 3.5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தியது BSNLEU

JAO PART II தேர்வுகள் நடத்திட வழிவகை செய்தது BSNLEU

பெண் ஊழியரின் பேறுகால விடுப்பு 135 லிருந்து 180 நாட்களாக உயர்த்தியது BSNLEU.

குழந்தைகள் பராமரிப்புக்கு பெண்களுக்கு  CCL விடுமுறை பெற்றுத்தந்தது BSNLEU  

பங்குகளை விற்காமல் முழு நிறுவனமாக இன்றுவரை தொடர்ந்து வருவதற்கு காரணம் BSNLEU

இரண்டாவது சங்கத்திற்கும் அங்கீகாரம் என்ற பரந்த ஜனநாயகம் அளித்தது BSNLEU

2005ல் நமது தரைவழி கேபிள்களை தனியாருக்கு தரைவார்க்க முடிசெய்து நமது வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்த திட்டத்தை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியது BSNLEU. இப்படி கடந்த 15 ஆண்டுகளில் BSNLEU  வின் சாதனைகளை இன்னும் அடுக்கலாம். 

இன்றைய காலத்தில், இன்றைய அரசை எதிர்த்து இன்னும் வீரியமாய் செயல்படவும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து தலைமையேற்று நடத்திடவும், ஊழியர்கள் அதிகாரிகளை இணைத்து BSNL ஐ வளர்ச்சிக்கு இட்டுச்செல்லவும், VRS/CRS திட்டங்களை முறியடிக்கவும், டவர்களை பாதுகாத்து 4 G சேவை பெற்று நிறுவனத்தை உயர்த்தவும், திட்டமிட்டு மறுக்கப்பட்டுவரும் புதிய ஊதியவிகிதத்தை சிறப்புடன் பெற்றிடவும்,நமது நிலங்களை பறித்து தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் இந்த அரசை எதிர்த்து தைரியமாக போராடி நமது நிலங்களை பாதுகாக்கவும், சமரசமற்ற போராட்ட தலைமை தான் வேண்டும். இன்றைய தேதியில், BSNLEU பேரியக்கம் மட்டுமே, சமரசமற்ற போராளி என நீங்கள் நன்கு அறிவீர்கள்.

சுயநலம் கொண்டும், தங்கள் சுய லாபத்துக்காகவும் ஊழியர் நலன்களை அடகுவைக்கத் துடிப்பவர்களின் பொய் பிரச்சாரங்களையும், போலி வாக்குறுதிகளையும்,
அவதூறுகளையும்,  ஆசை வார்த்தைகளயும், துச்சமென தூக்கியெறிந்து, இந்த நிறுவனத்தையும் ஊழியர்களையும் சொசைட்டியையும் அதன் உறுப்பினர் நலன்களையும் சொசைட்டி நிலங்களை நிரந்தரமாய் காத்திடும் ஒரே நம்பிக்கையுள்ள சங்கமாம் BSNL ஊழியர் சங்கத்தை 8வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் வரிசை எண் 8 ல், செல்போன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்வீர் என அன்போடும், பண்போடும், பணிவோடும் கேட்டு கொள்கிறோம். 

வாக்களிக்கும் நாள் 16.9.19.

நாளை 16.9.19 நீங்கள் அளிக்கபோகும் வாக்கு உங்களையும் இந்த நிறுவனத்தையும் பாதுகாக்கின்ற  வாக்கு என்பதனை நினைவில் கொள்ளவும். நன்றி! வணக்கம்!!

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 


தகவல் ஆதாரம்:  BSNLEU, சென்னை தொலைபேசி.