தொழிற்சங்க வரலாற்றில் துவங்கியது புதிய யுகம்!
வேறெங்கும் காணாத வெற்றியின் புது வடிவம்!
நெருப்பு "ஆறு" கடந்து
எழுச்சியாய் "ஏழாம்" வெற்றி!
தேசத்தைத் திருப்பிய திடமான வெற்றி!
பொய்யரை, புளுகரை புரட்டிப் போட்ட புயலாய் வெற்றி!
வெற்றி அன்னை பெற்ற களிறாம் BSNLEUவின் பிரம்மாண்ட வெற்றி!
பத்தொன்பது சர்க்கிளில் முதலிடம் வென்று,
ஒன்பதாயிரத்து ஐந்நூறு
ஓட்டுகள் கூடுதலாக குவித்த வெற்றி!
மகாபாரதம் தொட்டு,
அகண்ட பாரதம் வரையில், போர்க்களப் புருசன் "அபிமன்யு" என்பதைப்
புரிய வைத்த மாபெரும் வெற்றி!
சதிகார அரசுக்கும், சதிராடும் துறைக்கும், சகுனிகள் பலர்க்கும்
சம்மட்டி அடி கொடுத்த அசகாய வெற்றி
கூட்டணி பலத்தில் தான் ஈட்டினோம் வெற்றி எனக் கூப்பாடு போட்டவர்க்கு வாய்ப்பூட்டு போட்ட வெற்றி!
ஊழியர் உயிரிலே ஓர் அங்கம் என்று
BSNLEUவை உயர்த்திய வெற்றி!
ஐம்பத்தி எட்டுக்கும், அடாவடி ஓய்வுக்கும்
ஆப்பு வைத்திடும் அசத்தலான வெற்றி!
முடக்கி வைத்து,
மூலையில் தள்ளி, BSNL மூச்சினை நிறுத்திட சூழ்ச்சிகள் செய்யும்,
மூர்க்க அரசினை தாக்கி வீழ்த்துவோம்!
தடைகளை உடைப்போம்!
தனலாய் எழுவோம்!
வருவாய் கூட்டுவோம்!
வானை எட்டுவோம்!
இந்தியத் தொலைத்தொடர்பின்
இமயமாய் உயர்வோம்!
புரட்சி வாழ்த்துக்களுடன்....
சரவணன் திருவண்ணாமலை