8 மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், ஆட்குறைப்பு, வேலை நேர குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், 26.09.2019 முதல் 28.09.2019 வரை மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஒப்பந்த ஊழியர்களுக்கு TNTCWU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில் பெரும்பான்மையான ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். வீரம்செறிந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட TNTCWU மற்றும் BSNLEU சங்கங்கள் சார்பாக பாராட்டுக்கள் மற்றும் செவ்வணக்கங்கள்.
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக, 26.09.2019 அன்று மாவட்ட தலைநகரங்களிலும், 27.09.2019, 28.09.2019 ஆகிய தினங்களில் கிளைகளில் TNTCWU சங்கத்தோடு இணைந்து, வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
நமது மாவட்டத்தில், 26.09.2019 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பும், 27.09.2019 மற்றும் 28.09.2019 இரண்டு தினங்களும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,