BSNLEU சங்கத்தின் தொடர் ஏழாவது வெற்றி! சாதனை சரித்திரம் தொடர்கிறது!!
BSNL ஊழியர்கள் மீண்டும் ஒரு முறை BSNLEU சங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பித்துள்ளனர். நமது சங்கம் 7வது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில், 48029 வாக்குகள்(43.44%), பெற்று, 9494 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 35 மாநிலங்களில், 21 மாநிலங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
எந்த பொதுத் துறையிலும் ஒரு சங்கம் தொடர்ச்சியாக 7 முறை வென்றதாக வரலாறு இல்லை. ஆனால் BSNL அரங்கில் BSNLEU ஏழாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. BSNL ஊழியர்கள் BSNLEU தான் நிறுவனத்தையும் தேசத்தத்தையும் காக்கும் என மீண்டும் மகுடம் சூட்டியுள்ளார்கள்.
தமிழ் மாநிலத்தில் 2831 வாக்குகளும், சேலம் மாவட்டத்தில் 322 வாக்குகள் (44.53%) வாக்குகள் பெற்றுள்ளோம். BSNLEU அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, திடமான வெற்றியை பரிசளித்த வாக்காளர் தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி.
மகத்தான இந்த வெற்றிக்காக, உழைத்திட்ட அத்துனை மாவட்ட சங்க, கிளை சங்க நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் செவ்வணக்கங்கள்!
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
அகில இந்திய முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்