4G அலைக்கற்றை மற்றும் BSNLன் புத்தாக்கத்திற்கு நிதி உதவி ஆகியவை ஒன்று பட்ட போராட்டங்களால் அடைந்துள்ள மகத்தான வெற்றி.
4G மற்றும் BSNL புத்தாக்கத்திற்கு நிதி உதவி வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை BSNLக்கு தானாக கிடைத்ததல்ல என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அனைத்து சங்கங்களும் போராடி பெற்ற கோரிக்கைகளாகும். BSNLல் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும், துவக்கத்தில் FORUM என்ற பெயரிலும், தற்போது AUAB என்ற பெயரிலும் BSNLன் புத்தாக்கத்திற்காக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்சார இயக்கங்களையும், வீரஞ்செறிந்த வேலை நிறுத்தங்களையும் நடத்தியுள்ளது. ஊதிய வெட்டு மற்றும் BSNL நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களையும் மீறி பெருந்திரளாக இந்த இயக்கங்களில் பங்கு பெற்றனர்.
2018, பிப்ரவரி18 முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ESMA சட்டத்தை பிரியோகித்ததை நாம் மறுக்க முடியாது. இந்த போராட்டத்தை முறியடிக்க BSNL நிர்வாகமும், தனது பங்கிற்கு AUAB தலைவர்களுக்கு FR 17 A குற்ற பத்திரிக்கை வழங்கியது. ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போவதாக நிர்வாகம் மிரட்டியது.
எனினும், இத்தகைய மிரட்டல்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி உருக்கு போன்ற உறுதியுடன் ஊழியர்களும் அதிகாரிகளும் பெருந்திரளாக போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் பங்கு பெற்றனர். தெருமுனைக் கூட்டங்கள், பேரணிகள், மனித சங்கிலி போன்ற இயக்கங்கள் மூலமாகவும் அனைத்து சங்கங்களும் மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அவை BSNLன் புத்தாக்கத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுத் தந்தது.
தற்போது நாம் பெற்றுள்ள வெற்றிகள் அனைத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடத்திய ஒன்றுபட்ட, தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த பரிசு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்