18.10.2019 - சேலம் PGM அலுவலகம், காலை 10.30 மணி
11.10.2019 அன்று புதுடில்லியில், NFTEBSNL சங்க அலுவலகத்தில், AUAB அமைப்பின் கூட்டம், 8வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின், முதன்முறையாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் தோழர் சந்தேஸ்வர் சிங், கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைப்பின் கன்வீனர் தோழர் P. அபிமன்யு, அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தி விளக்கமாக பேசினார்.
செப்டம்பர் சம்பளத்தை வழங்காதது குறித்து கடுமையான கோபத்தை கூட்டம் வெளிப்படுத்தியது. கடந்த 8 மாதங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் வழங்கப்படாதது, மின்சார கட்டணங்கள் செலுத்தப்படாதது, பி.எஸ்.என்.எல் மூடப்படும் என்று ஊடகங்களில் தோன்றும் தவறான அறிக்கைகள் கூட்டத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கபட்டன.
ஆழ்ந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, 18-10-2019 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது, பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முறையே கார்ப்பரேட் அலுவலகம், மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக தொடர்பு கொள்ளப்பட வேண்டும் என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கோரப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, AUAB மீண்டும் 21-10-2019 அன்று சந்திக்கும்.
மத்திய AUAB போராட்ட அறைகூவலுக்கிணங்க, நமது சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, 18.10.2019, வெள்ளிக்கிழமை அன்று, சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு போராட்டம் துவங்கும்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். நம்முடைய போராட்ட வீ ச்சு, அரசின் நாசகர திட்டங்களை தவிடு பொடியாக்க வேண்டும்.
கோரிக்கைகள்: –
1. BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும்.
2. ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம், மின்சார கட்டணம் மற்றும் வாடகைகளை செலுத்தப் படவேண்டும்.
3. BSNL நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரத்தை உடனடியாக ஒதுக்கி, நிதி உதவி / மென்மை கடன் போன்றவற்றை வழங்கி, நில பணமாக்குதல் திட்டத்திற்கான ஒப்புதல் கொடுத்து, நிறுவன புத்தாக்கத்தை உறுதி படுத்த வேண்டும்.
4. மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய திருத்தம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பங்களிப்பு சலுகையை வழங்க வேண்டும்.
5. GPF, வங்கி கடன் தவணை, சொசைட்டி, LIC பிரீமியம் போன்றவற்றுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில், அலைகடலென திரள்வோம்! அமைதி வழியில் போராடுவோம்!!
கோரிக்கைகளை வெல்வோம்!!!
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், சேலம் AUAB