Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, October 22, 2019

மத்திய சங்க செய்திகள்

Image result for bsnleu chq


BSNL நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக, 2019 மே மாதம் முதல், LIC, GPF, சொசைட்டி, வங்கி கடன் தவணை உள்ளிட்ட எந்த ஒரு பிடித்தமும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு BSNL நிர்வாகத்தால் அனுப்படவில்லை. குறிப்பாக, LIC பிரீமியம் செலுத்தப்படாததால், பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஆலோசனையாக, 22.10.2019 அன்று நமது மத்திய சங்கம் BSNL CMD அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதன்படி, LIC நிறுவனத்தின் மதிப்புமிக்க வாடிக்கையாளர் என்ற முறையில், பிரீமியம் தொகை தாமாதத்திற்கு அபராதம் மற்றும் தண்டனை ஏதும் விதிக்காமல், சிறப்பு விலக்கு அளிக்க LIC நிறுவனத்தை நமது CMD நிர்வாகம் அணுக வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரியுள்ளது. நாமும், நமது பங்கிற்கு நமது தோழமை சங்கமான (AIIEA) இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொது செயலரை ஏற்கனவே அணுகியுள்ளோம். அவரும் அவர்களது நிர்வாகத்திடம் இது தொடர்பாக விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  

=================================================================

TT மற்றும் JE இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வுகள் 2019 டிசம்பர் வரை நடத்த நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், 2018-19 ஆண்டிற்கான JTO இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வும் நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, மேற்கண்ட போட்டி தேர்வுகளை உடனடியாக நடத்துமாறு நிர்வாகத்திற்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

=================================================================   
2017-18ம் ஆண்டிற்கான JTO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு கடந்த 26.05.2019 அன்று நடைபெற்றது. வேண்டுமென்றே தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்துவது முறையல்ல, முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என நமது மத்திய சங்கம் 21.10.2019 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

=================================================================

தொலைத்தொடர்பு மாவட்டங்களை ஒருங்கிணைத்து புதிய வணிக பிரிவுகளாக உருவாக்குவது சம்மந்தமாக நிர்வாகம் அவ்வப்பொழுது பல வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அவ்வாராக, 17.10.2019 அன்று ஊழியர் விரோத உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், (பழைய) SSAவில் பணிபுரியக்கூடிய ஊழியர், நிர்வாக தேவைகளுக்காக புதிய வணீக பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யலாம் என்று உத்தரவு வெளியிட்டுள்ளது. நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு இது ஒரு உதாரணம். காரணம், SSA அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய வணீக பகுதிகள் உருவாக்கம் செய்யும்போது நமக்கு கொடுத்த வாக்குறுதியை அப்பட்டமாக மீறுவதால், உடனடியாக இதை கண்டித்து 18.10.2019 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம். மீண்டும், 21.10.2019 அன்று ஒட்டு மொத்தமாக அந்த உத்தரவை நிறுத்தி வைக்கவும், (KEPT IN ABEYANCE) இது சம்மந்தமாக நம்முடன் விவாதிக்க நேரம் ஒதுக்கவும் நமது மத்திய சங்கம் கோரியுள்ளது. இந்த ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டிக்காமல் மற்ற சங்கங்கள் வாய் மூடி மவுனமாக இருக்கும் போது, நமது மத்திய சங்கம் துரிதமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது. 

=================================================================

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் வங்கி ஊழியர்கள், இன்று, 22.10.2019 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அவர்களின் நியாமான கோரிக்கைகள் வெற்றி பெற, BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்