ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனைக்காக, BSNLEU சங்கமும், BSNLCCWF சம்மேளனமும் கடுமையான முயற்சிகள் செய்து வருகின்றது. நேற்று, 23.10.2019, திரு ராஜன் வர்மா, Chief Labour Commissioner, New delhi அவர்களை நமது சங்கத்தலைவர்கள் புது டெல்லியில் நேரில் சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை எடுத்துக் கூறினார்.
உடனடியாக, திரு. ராஜன் வர்மா அவர்கள், BSNL CMD, திரு P K. பூர்வார் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு காலதாமதம் மேலும் செய்யாமல், 16.08.2019 அன்று வழங்கிய உத்தரவின் அடிப்படையில், விரைந்து சம்பளம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
23.10.2019 அன்று நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்திற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் CLC யிடம் CMD தகவல் தெரிவித்துள்ளார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
CLC உத்தரவு காண இங்கே சொடுக்கவும்