25.10.2019 அன்று, தொலை தொடர்பு துறையின் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் மற்றும் BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. திரு P.K.புர்வார் CMD BSNL மற்றும் திரு அரவிந்த் வட்னேர்கர் DIRECTOR(HR) ஆகியோரும் உடன் இருந்தனர். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா பங்கு பெற்றார். BSNLன் புத்தாக்கத் திட்டத்திற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுத் தர தொலை தொடரபு துறையின் செயலாளர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சங்க தலைவர்கள் அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
BSNLன் புத்தாக்க திட்டத்திற்கு அமைச்சரவை கொடுத்துள்ள ஒப்புதல், சந்தையில் சரியான செய்தியை கொண்டு சென்றுள்ளது என்று தொலை தொடர்பு துறையின் செயலாளர் தெரிவித்தார். அதன் விளைவாக ENTERPRISE BUISNESS வாடிக்கையாளர்கள் BSNLல் சேவைகளை பயன்படுத்த விருப்பம் தெரிவிப்பதாகவும், இதற்கு மேல் வங்கிகளும் BSNLக்கு கடன் கொடுக்க முன்வரும் என்றும் அவர் தெரிவித்தார். விருப்ப ஓய்வு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் விளக்கினார். BSNL சொத்துக்களை பணமாக்குவது தொடர்பாக பேசுகையில், அதன் ஃபைபர்கள், டவர்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் அதிகப்படியான வருவாயை ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
3வது ஊதிய மாற்றம் தொடர்பாக தலைவர்கள் கேட்டதற்கு பதிலளிக்கையில், நிறுவனத்தின் நிதி நிலை மேம்ப்பட வேண்டும் என்றும், அதற்கு பின்னர் தான் ஒரு உடன்பாட்டிற்கு வர இயலும் என்றும் தெரிவித்தார். அதே சமயம் ஊதிய மாற்றம் நடைபெறாமல், ஓய்வூதிய மாற்றம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்