Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, October 26, 2019

BSNL புத்தாக்க திட்டத்தை நிர்வாகம் விளக்கியது

Related image
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை, அனைத்து சங்க தலைவர்களுக்கும் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது


மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தை 24.10.2019 அன்று BSNL நிர்வாகம் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கியது. BSNL CMDயுடன் அனைத்து இயக்குனர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். BSNL CMDயும் மனித வள இயக்குனரும் விளக்கங்களை கொடுத்தனர். 

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவது, அரசாங்கத்தின் SOUVERIGN GUARANTEEயுடன் கூடிய 15,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிடுவது, 20,000 கோடி ரூபாய்கள் அலவிற்கு BSNLன் நிலங்களை பணமாக்குவது, அந்த பணத்தை கடனை திருப்பிக் கட்ட பயன்படுத்துவது, MTNL நிறுவனத்தை BSNLஉடன் இணைப்பதன் மூலமாக அதனை BSNLன் துணை நிறுவனமாக மாற்றுவது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தாக்க திட்டத்தை அவர்கள் விவரித்தனர். 

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஊக்கத்தொகையையும், ஓய்வூதியத்தையும் கூட்டினால் வரும் தொகை, மீதமுள்ள காலத்திர்கு பெற இருக்கும் ஊதியத்தில் 125%ஐ விஞ்சக்கூடாது. இந்த ஊக்கத்தொகை அரசாங்கத்தால் இரண்டு தவணையாக தரப்படும். இந்த நிதி ஆண்டான 2019-20ல் முதல் தவணையும், அடுத்த நிதி ஆண்டான 2020-21ல் இரண்டாவது தவணையும் பட்டுவாடா செய்யப்படும். உண்மையில் ஓய்வு பெறக்கூடிய தேதியில் தான், அதாவது 60 வயது நிறைவடைந்த பின் தான் GRATUITY மற்றும் PENSION COMMUTATION ஆகியவை வழங்கப்படும். 

தொலை தொடர்பு துறையில் இருந்து உத்தரவு வந்தவுடன் விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்படுவதற்கான கால அட்டவணை வெளியிடப்படும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்