BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம் தொடர்பான மத்திய அமைச்சரவை முடிவுகளின் மீதான BSNL ஊழியர் சங்கத்தின் கருத்து
23.10.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில், BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கத்திற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதனை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் அறிவித்தார். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் விவரிக்கும் போது, BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்கள் இந்திய தேசத்தின் சொத்துக்கள் என்றும், அவற்றை மூடிவிடவோ, பங்குகளை விற்கவோ அல்லது மூன்றாவது நபரிடம் தாரை வாக்கப்படுவதோ நடக்காது என தெரிவித்தார். இயற்கை பேரிடர் காலங்களில் எல்லாம், BSNL நிறுவனம் தான் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சேவையை கொடுத்தது என்பதை அவர் மிகச்சரியாக உயர் நிலைப்படுத்தி அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதுகாப்பு படைகளுக்கான தொலை தொடர்பு சேவைகளை கட்டியமைத்து, பராமரிப்பதில் BSNLன் முக்கியத்துவத்தையும், அவர் அடிக்கோலிட்டு தெரிவித்தார்.
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றையை நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் வழங்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதற்காக இந்த இரண்டு பொதுத்துறைகளிலும், தனது முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும். கடந்த சில வருடங்களாகவே, BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB), அரசு BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம். BSNLக்கு சமதளம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதோடு, அதன் காரணமாக பழிவாங்குதலுக்கும் உள்ளாக்கப் பட்டனர். ஊழியர்களின் இந்த கோரிக்கையை, மத்திய அமைச்சரவையில் சிறப்பாக முன் வைத்து, அதற்கு ஒப்புதலையும் பெற்றுத் தந்த மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் தனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையினை நிகழ்த்தியதற்காக அனைத்து ஊழியர்களையும் BSNL ஊழியர் சங்கம் இந்த சமயத்தில் வாழ்த்துகிறது. BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேராதரவு கொடுத்த பொது மக்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
BSNL ஊழியர் சங்கம் மற்றும் இதர பல அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதிகப்படியான ஊழியர்கள் காரணமாகத்தான் BSNL நிறுவனம் நஷ்டமடைந்தது என்கிற வாதம் சரியானதல்ல என BSNL ஊழியர் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. தற்போது உள்ளதை விட ஒரு லட்சம் ஊழியர்கள் அதிகமாக இருந்த போதே, இந்த நிறுவனம் 2004-05ஆம் ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய்களை நிகர லாபமாக பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் தனியார் நிறுவனங்கள் தங்களது வருவாயில் 5%ஐ மட்டுமே ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கும் போது BSNL நிறுவனம் 70%ஐ வழங்குகிறது எனக் கூறுவதும் ஒரு நியாயமான ஒப்பீடாக இல்லை. தனியார் நிறுவனங்கள், தங்களின் பல பணிகளை அயல் பணிக்கு (OUT SOURCING) விட்டு விடுவதால், அந்த செலவுகள், சம்பளப் பட்டியலில் வருவதில்லை. ஆனால், BSNLல் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த ஊழியர்கள் உட்பட, தங்களின் சொந்த ஊழியர்களை வைத்தே செய்யப்படுகிறது.
விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலமாக பெரும்பாலான ஊழியர்களை வேலையை விட்டு விரட்டுவதற்கு பதிலாக, இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்காக செலவு செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ள பணத்தை BSNLன் வலைத்தளங்களை மேப்படுத்தவும், விரிவுபடுத்தவும் செலவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும். அது நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு கண்டிப்பாக பயன் தரும்.
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் முன்மொழிவையும் அரசு வைத்துள்ளது என தெரிய வருகிறது. அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் இந்த விஷயத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இது போன்ற விஷயங்களை அரசாங்கம் எடுக்கக் கூடாது என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கடன்களை திருப்பிக் கட்டவும், தனது வலைத்தளங்களை விரிவு படுத்தவும் தேவையான நிதியினை உருவாக்க BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிட உள்ள 15,000 கோடி ரூபாய்களுக்கான பத்திரங்களுக்கு அரசின் SOUVERIGN GUARANTEE வழங்கப்படும் என்ற முடிவையும் BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது. BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைப்பது என்பதையும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் BSNLன் துணை நிறுவனமாக MTNL செயல்படும். இதற்காக MTNL பங்கு சந்தையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்ற முடிவையும் BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அதே சமயம் MTNL இணைத்துக் கொள்வதற்கு முன், அந்த நிறுவனம், கடன் இல்லா நிறுவனமாக மாற்றித் தர வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், 38,000 கோரி ரூபாய்கள் அளவிற்கு BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் நிலங்களை பணமாக்குவதற்கும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் நிதியினை, வலைத்தள விரிவாக்கத்திற்கும், உயர் நிலைபடுத்தவும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதே சமயத்தில், இந்த முன்மொழியப்பட்டுள்ள பணமாக்கல் நடவடிக்கைகளின் காரணமாக BSNL மற்றும் MTNL, நிறுவனங்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்படக் கூடாது எனவும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
-ஒப்பம்-
P.அபிமன்யு.
பொதுச்செயலாளர்,
BSNL ஊழியர் சங்கம்.
புதுடெல்லி.
ஆங்கில செய்தி காண இங்கே சொடுக்கவும்