உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர் 8 மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 01.10.2019, BSNL அமைப்பு தினத்தன்று, நாடுமுழுவதும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, அகில இந்திய UAB அறைகூவல் கொடுத்திருந்தது.
பெரும்பான்மை ஊழியர்கள், அதிகாரிகளை பிரதிநிதித்துவபடுத்த கூடிய சங்கங்களான, BSNLEU , SNEA, AIBSNLEA சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 01.10.2019 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டதிற்கு தோழர்கள் S . ஹரிஹரன், (BSNLEU), N .சந்திரசேகரன் (SNEA), S . ராமசந்திரன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
AIBSNLEA சேலம் மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம் துவக்கவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் R . மனோகரன், AIBSNLEA மாநில அமைப்பு செயலர் தோழர் R . மணிகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தோழர் G. சேகர், மாவட்ட செயலர், SNEA, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு நன்றி கூறி போராட்டத்தை முடித்துவைத்தார். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 ஊழியர்கள், அதிகாரிகள் (50 பெண் தோழர்கள் உட்பட) திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர், தோழியர்களுக்கும், சேலம் மாவட்ட UAB சார்பாக, பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்