அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், 25.11.2019, நேற்று, சேலம் PGM அலுவலகத்தில், BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக, உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட கோஷங்களை மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . சண்முகம், P . செல்வம் எழுப்பினர்.
போராட்டத்தை துவக்கி வைத்து, தோழர் S . ஹரிஹரன், BSNLEU சேலம் மாவட்ட தலைவர், துவக்கவுரை வழங்கினார். AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் P . ராமசாமி, மாவட்ட செயலர் தோழர் M . மதியழகன், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். ஏற்கனவே, VRS அமுல்படுத்தப்பட்ட வங்கி துறை சார்பாக, BEFI செயலர் தோழர் P. B . ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். CITU தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் S. K. தியாகராஜன் நிறைவுரை வழங்கினார்.
மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 150 ஊழியர்கள் திரளாக பங்குபெற்றனர்.
வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்