2019 நவம்பர் 20 முதல் 22 வரை
PGM அலுவலகம், சேலம் -7, காலை 10.30 மணி முதல்
AUAB வருகின்ற நவம்பர் 20, 21, 22 தேதியில் டெல்லியில் கார்ப்பரேட் அலுவலகத்திலும், மாநில தலைமை அலுவலகத்திலும், SSA தலைமை இடத்திலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
AUAB முன்வைத்துள்ள கோரிக்கைகள்:
1. ஊழியர்களின் சம்பளத்தை BSNL/DOT உடனடியாக வழங்க வேண்டும். சம்பளப் பிடித்தங்கள் (வங்கி, LIC, சொசைட்டி, GPF) உடனடியாக செலுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும். வாடகை மற்றும் EB நிலுவைகள் உடனடியாக செலுத்த வேண்டும்.
2. VRS க்குப் பின்னர் BSNL சேவை பராமரிப்புக்கான வரைவு திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும். BSNL நிறுவனத்தின் மறுகட்டமைப்பு திட்டத்தை வெளியிட வேண்டும். 4G சேவையை உடனடியாக துவக்க வேண்டும்.
3. VRS 2019 திட்டத்தில் i) சம்பள மாற்றம் ii) பென்ஷன் மாற்றம் iii) கம்யுட்டேஷன் iv) கிராஜிவிட்டி குறித்து AUAB கோரியுள்ள விளக்கங்களை VRS க்கு விருப்பம் தெரிவிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்னர் வெளியிட வேண்டும்.
4. மூன்றாவது சம்பள மாற்றம் வரும் வரையில் உடனடியாக 100% of IDA (119.5%) சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.
5. பென்ஷன் மாற்றம், பணியில் உள்ள ஊழியர்களின் சம்பள மாற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டும். (De link). BSNL லில் நேரடியாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு 30% ஓய்வூதிய பலன் வழங்க வேண்டும்.
6. BSNL உருவான போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்ககூடாது.
தோழர்களே! அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் ஊழியர் விரோத, நிறுவன விரோத கொள்கைகளை ஒன்று பட்ட போராட்டங்கள் மூலம் வீழ்த்துவோம். மூன்று நாள் போராட்டத்தில் திரளாக பங்கு பெறுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்கங்களின் கூட்டு போர் பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும்