2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு
18.11.2019 அன்று AUAB மற்றும் Director (HR) ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்பது தான் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதி. நவம்பர் மாத ஊதியம் எப்போது? பதிலேதும் இல்லை.
ஊழியர்களை கடுமையாக பாதித்து வரும், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை உரிய மட்டங்களுக்கு செலுத்துவது தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது முக்கியமான விஷயம். அதே போல ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தொடர்பாகவும் எந்த முன்னெறமும் இல்லை.
விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்த ஊழியர்களின் பிரச்சனைகளிலும் முன்னேற்றம் இல்லை. ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைப்பது தொடர்பாக என்ன பதில்? 30% ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக என்ன வாக்குறுதி? தன்னுடைய நலன்களைப் பற்றி மட்டுமே BSNL நிர்வாகம் கவலைப்படுகிறது. ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவர்களுக்கு கவலை ஏதும் இல்லை.
எனினும் மூன்று நாட்கள் உண்ணாவிரதத்திற்கு செல்வது தொடர்பாக AUAB சங்கங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. எனவே 2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்கம்