BSNLEU சங்கத்தின், சரித்திர சாதனைகளில் ஒன்றான, நான்கு கட்ட பதவி உயர்வு என அழைக்கப்படும் "NEPP பதவி உயர்வு" திட்டத்தின்படி, 01.10.2019 முதல், நமது சேலம் மாவட்டத்தில் சுமார் 400 தோழர்களுக்கு மூன்றாவது பதவி உயர்வு கிடைக்க வேண்டும்.
பல்வேறு காரணங்களால், சற்று தாமதமாக, பணிகளை துவங்கிய சேலம் மாவட்ட நிர்வாகத்திடம், நடவடிக்கைகளை துரித படுத்த நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதன் அடிப்படையில், கடந்த 28.10.2019 அன்று 79 தோழர்களுக்கு (OS / AOS / SOA - 62, JE - 2, ATT - 15) உத்தரவு பெற்று கொடுத்தோம். பெரும்பான்மை கேடராக விளங்கக்கூடிய, TT தோழர்களுக்கு முதலில், 22.11.2019 அன்று 9 தோழர்களுக்கும், இன்று, 28.11.2019 அன்று 309 TT தோழர்களுக்கும் உத்தரவு பெற்று தந்துள்ளோம்.
நமது கோரிக்கையை ஏற்று, பல சிரமங்களை தளர்த்தி, உத்தரவு வெளியிட்ட சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நெஞ்சு நிறை நன்றிகள்.
ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சில ப்ரத்யேக காரணங்களால், பரிசீலனையில் உள்ள, விடுபட்ட தோழர்களுக்கும், விரைந்து உத்தரவு பெற்றுத்தறுவோம் என தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
307 TT தோழர்களின் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்