05.11.2019, சேலம் செவ்வை மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில், மாதாமாதம் நடைபெறும் BSNLEU - TNTCWU சங்கங்களின் இணைந்த ஆத்தூர் கிளைகளின் கிளை கூட்டம், 07.11.2019 அன்று ஆத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர் P . குமாரசாமி, கிளை தலைவர் தலைமை தாங்கினார். ஊரக கிளை செயலர் தோழர் G. R . வேல்விஜய் அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட தலைவர் தோழர் S . ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
கூட்டத்தில், BSNL புத்தாக்கம், விருப்ப ஓய்வு திட்டம் சம்மந்தமான உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு தலைவர்கள் விளக்கம் அளித்தனர். நகர கிளை செயலர் தோழர் A . அருள்மணி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்