Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 22, 2019

மத்திய அரசிற்கும், BSNL நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Related image

விருப்ப ஓய்வு திட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும்- தொலை தொடர்பு துறை செயலாளருக்கும், BSNL CMDக்கும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை



விருப்ப ஓய்வு திட்டம்-2019ல் உள்ள சதி வலைகளைப் பற்றி தெரியாமல் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல இசைவு தெரிவித்துள்ளனர். விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், BSNL நிர்வாகம், ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல நிர்பந்திக்கிறது. 

ஓய்வூதியத்தை COMMUTE செய்வது, முன் தேதியிட்டு 3வது ஊதிய மாற்றம் நடைபெற்றால், அதற்கு விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களை தகுதியானவர்களாக மாற்றுவது, ஓய்வு பெறும் வயது தொடர்பாக 2000ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை மதித்து நடப்பது, பணியிட மாற்றம் மற்றும் பணிச்சுமை ஆகியவை தீர்வு காணப்பட வேண்டிய சில முக்கிய பிரச்சனைகள் ஆகும். 

விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் COMMUTE செய்வது, அவர்களை மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர்களாக மாற்றுவது ஆகிய பிரச்சனைகள் தீர்வு காணப்படவில்லை என்றால், அவர்கள், கடுமையான நஷ்டத்தை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண வேண்டி,  BSNLEU, BTEU, FNTO, BSNL MS, BSNL ATM மற்றும் BSNL OA ஆகிய சங்கங்கள் 25.11.2019 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. 

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணப்படவில்லை என்றால், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை, தங்களின் விருப்பத்தை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும் என இந்த சங்கங்கள் அனைத்தும், தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கும், BSNL CMDக்கும் கடிதம் எழுதியுள்ளன.

தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்