சேலம் PGM அலுவலகம் - மதியம் 12.30 மணி முதல்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி 04.12.2019 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்த AUAB அறைகூவல்
மேலும், BSNL ஊழியர்களுக்கும் டெபுடேஷனில் உள்ள ITS அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கும் விதத்தில் எந்த ஒரு பாரபட்சமும் இருக்கக் கூடாது என்றும் AUAB கோரியுள்ளது. 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியம் உடனடியாக வழங்கப்படவில்லை எனில் தீவிரமான போராட்டங்கள் நடைபெறும் என்றும் AUAB, BSNL நிர்வாகத்திற்கும், DoTக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சங்கங்கள் அறைகூவல்படி, நமது மாவட்டத்தில், 04.12.2019 அன்று மதியம் 12.30 மணி முதல், சேலம் PGM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU
மத்திய சங்கங்கள் கூட்டு பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்