ERP மூலமாக சங்கங்களை மாற்றிக் கொள்ளும் முன்மொழிவை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம்
கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு, 2019, டிசம்பர் 6ஆம் தேதி கொடுத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை கலந்தாலோசிக்காமல் கார்ப்பரேட் அலுவலகம் முடிவுகள் எடுக்கும் விஷயத்தை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் அமலாக்கத்தின் காரணமாக, வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஊழியர்கள் சங்கங்களை மாற்றிக் கொள்வது தவிர்ப்பது என்பதை ஒரு கட்ட விஷயமாக, BSNL ஊழியர் சங்கம் ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.
மேலும் வருடத்திற்கு ஒரு முறை ஊழியர்கள் தங்களின் விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம் என்கிற முன்மொழிவையும் ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.
எனினும் இதற்கு மேல் ஊழியர்கள், சங்கங்களை ERP மூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற SR பிரிவின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. ஒரு நல்ல எண்ணிக்கையிலான ஊழியர்கள் கணிணி பயன்பாட்டில் சளரமாக இல்லையென்ற காரணத்தால், தற்போதுள்ள சங்கங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையே தொடர வேண்டும் என்றும் BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க இணையம்