08.01.2020 அன்று, நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 10 கோடி தொழிலாளர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் இந்த தேச பக்த போரில், BSNLEU சங்கமும் கலந்து கொள்ள, 2019அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில், காசியாபாத்தில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழுவில் முடிவு எடுத்திருந்தோம்.
ஜனவரி 8, 2020 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்யும் பணிகளின் ஒரு பகுதியாக 27.12.2019 அன்று அனைத்து கிளைகிளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தற்போது நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில், பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை ஊழியர்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்து ஜனவரி 8 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும்.
கோரிக்கைகள் :-
பகுதி1 பொது கோரிக்கைகள்
1) பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/ தனியார்மயமாக்காதே.பகுதி1 பொது கோரிக்கைகள்
2) முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே.
3) தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.21,000/-ஆக உறுதி செய்.
4) விலைவாசியை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடு.
5) வேலை வாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் வேலையின்மையை கட்டுப்படுத்து.
6) அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒன்றுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பை உறுதி செய்.
7) அரசு நிதியுதவியின் மூலம் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.10,000த்தை உறுதிப்படுத்து.
பகுதி2 BSNL நிறுவன கோரிக்கைகள்
2) 01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை உறுதி செய்.
3) BSNLன் விரிவாக்கத்திற்காகவும், வலைத்தளங்களை மேம்படுத்தவும், தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும். கிராமப்புற சேவையினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டு.
4) BSNL ஓய்வூதியதாரர்களுக்கு, 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் வழங்கு.
5) BSNLன் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை உறுதி செய்.
6) BSNL ஊழியர்களுக்கு, DoTயும் BSNLம் உரிய தேதியில் ஊதியத்தை வழங்கு.
7) ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய பட்டுவாடாவை உறுதி செய்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்