BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பிந்தைய ROAD MAPஐ பற்றி விவாதிக்காமல், தன்னிட்சையாக தமிழ் மாநிலத்தில் ஒரு சில பொது மேலாளர்கள் நடந்து கொள்வது தொடர்பாக தலைமை பொது மேலாளருக்கு புகார்.
BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுக்கும் பணி முடிந்துள்ளது. 2020 ஜனவரி, 31 ஆம் தேதி வரை அந்த ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பின்னர் ஏற்படும் நிலை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல், தமிழகத்தில், ஒருசில பொது மேலாளர்கள்,
தன்னிட்சையாக பல உத்தரவுகளை போட்டு வருகின்றனர்.
அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் தோழர்களையும் நிம்மதியாக செல்ல விடுவதில்லை. இருக்கும் தோழர்களையும் அச்சுறுத்துகின்றனர். 11 மாத காலமாக ஊதியம் வாங்கமலேயே BSNLக்கு வேலை செய்து வரும் ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும், பணியிலிருந்து விரட்ட வேண்டும் என்கின்ற பல அடாவடித்தனங்களை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், NFTE சங்கமும் இணைந்து தமிழ் மாநில தலைமை பொது மேலாரிடம் 13.12.2019 அன்று கடிதம் வழங்கி விவாதித்துள்ளன. தலைமை பொது மேலாளரும் இதில் தலையிட ஏற்றுக் கொண்டார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மாநில சங்க வலைத்தளம்