2019, டிசம்பர் 5ஆம் தேதி பிரான்ஸ் தேசத்தில் மகத்தான பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அந்த பொது வேலை நிறுத்தத்தில் 15 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 1995க்கு பின் நடைபெற்றுள்ள மகத்தான வேலை நிறுத்தம் என கூறப்படுகிறது. தற்போதுள்ள ஓய்வூதிய பலன்களை குறைக்கும் வகையிலான மேக்ரான் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத ஓய்வூதிய மாற்றங்களை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸ் தேசத்தில் உள்ள சாலை மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பிரான்ஸ் தேசம் முழுவதிலும், பொதுத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் நடத்திய பெரும் ஆர்ப்பட்டங்களும் நடைபெற்றுள்ளன.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்