இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தள்ளாட்டம்- கடந்த ஆறரை ஆண்டுகளில் மிகக் குறைவு
இந்திய நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள காரணத்தால் அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதம் என்பது தொடர்ந்து தள்ளாடுகிறது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் GDP 4.5%ஆக குறைந்துள்ளது. 2013, மார்ச் மாதத்திற்கு பின் இது தான் மிகக் குறைந்த அளவாகும். கடந்த காலாண்டில் GDP 5% ஆக இருந்தது. அடுத்த காலாண்டில் இது 4%க்கு சென்று விடும் என்பது உறுதி.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், வெகு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருந்த இந்தியாவின் இந்த நிலை மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். அது தற்போது தகர்ந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் ICU பிரிவில் உள்ளதாக ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மிகச்சரியாக கூறுகிறார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்