Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 1, 2019

BPCLன் தனியார் மயம் என்பது BSNL ஊழியர்களின் கண்களை திறக்க செய்யட்டும்

Image result for bpcl logo

மிகப்பெரிய அளவில் லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)ஐ தனியார் மயமாக்க மத்திய மோடி அரசாங்கம் ஏற்கனவே முடிவெடுத்து விட்டது. உண்மையில், அதனை தனியார் மயமாக்குவதற்கான தேவையோ, நியாயமோ ஏதும் இல்லை. 1971ஆம் ஆண்டிற்கு முன் BPCL ஒரு பன்னாட்டு எண்ணெய் கம்பெனியாக இருந்தது. இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் சமயத்தில் அந்த நிறுவனம், இந்திய விமானப்படை போர் விமானங்களுக்கு எரி பொருள் வழங்க மறுத்து விட்ட காரணத்தால், அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள், 1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தம் முடிந்தவுடன், அந்நிறுவனத்தை தேசியமயமாக்கினார். 

தற்போது மோடி அரசாங்கம், வரலாற்றை புரட்டுகிறது. இந்த பொதுத்துறை நிறுவனத்தை தற்போது மீண்டும் இந்திய அல்லது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதனை தாரை வார்க்கப் போகிறது. BPCL நிறுவனத்தை தனியார் மயமாக்குவது என்பது தேச விரோதமே தவிர வேறு எதுவும் இல்லை. கூரை மீது ஏறி நின்று தேச பக்தியை பற்றி வாய் கிழிய உபதேசம் செய்பவர்கள் எல்லாம் ஒரு சுய ஆய்வை மேற்கொண்டு, நரேந்திர மோடி அரசாங்கம் எவ்வாறெல்லாம், தேச நலனில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

மோடி அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிராக 2020, ஜனவரி 8ஆம் தேதி, மத்திய தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்று BSNL ஊழியர் சங்கமும் முடிவெடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் BSNL ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுக்கின்றது. மேலும் நாம் அமைதியான பார்வையாளர்களாகவே இருந்தோம் என்று சொன்னால், BSNL நிறுவனத்தை அம்பானிக்கோ, அதானிக்கோ விற்பனை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்