BSNL ஊழியர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
18.11.2019 அன்று DIRECTOR(HR) மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அக்டோபர் மாத ஊதியம் நவம்பர் 28ஆம் தேதி வழங்கப்படும் என DIRECTOR (HR) தெரிவித்திருந்தார். எனினும், கொடுத்த வாக்குறுதியை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. நவம்பர் மாத சம்பளமும் வழங்கப்படவில்லை. இந்த இரண்டு மாத ஊதியம் எப்போது வழங்கப்படும் என்றும் தெரியவில்லை.
புதிய CMD பொறுப்பேற்றபின், MTNLல் நிகழ்ந்தது, BSNLலிலும் நடக்க துவங்கியுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தில் மேலும் அதிகப்படியான ஊழியர்கள் செல்ல, அவர்களை நிர்ப்பந்திக்கவே ஊதியம் இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது. BSNL நிர்வாகத்தின் இந்த போக்கிற்கு, BSNL ஊழியர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. இதர சங்கங்களுடன் கலந்தாலோசித்து பொருத்தமான எதிர் நடவடிக்கைகளை BSNLஊழியர் சங்கம் எடுக்கும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய / மாநில சங்க வலைதளம்