Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 19, 2019

BSNL புத்தாக்கத்தில் சிக்கல்!

Image result for ravi shankar prasad
மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்.

BSNLன் புத்தாக்க திட்டம் விமரிசையாக அறிவிக்கப்பட்டது. விருப்ப ஓய்வு திட்டம்-2019 மூலமாக, ஜனவரி 2020ல் சுமார் 80,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். BSNLக்கு அரசாங்கம் 4G அலைக்கற்றையையும் வழங்கி விட்டது. 

எனினும், ZTE, Nokia உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தர வேண்டிய 3,800 கோடி ரூபாய்களை BSNL தராத காரணத்தால், அந்நிறுவனங்கள், BSNLன் BTSகளை மேம்படுத்த முன் வருவதில்லை. மின் கட்டணம் செலுத்தவும், ஒப்பந்ததாரர்களின் பில்களை தீர்வு காணவும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்கும், உரிய தேதியில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய மட்டங்களுக்கு வழங்கவும் BSNL இடம் பணம் இல்லை. 

அடுத்த மூன்று, நான்கு மாதங்கள், BSNLக்கு முக்கியமான காலகட்டம். இந்த பொருளாதார நெருக்கடியை சந்திக்க இந்நிறுவனத்திற்கு, குறுகிய கால பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இல்லையென்றால், அரசு கொண்டு வந்துள்ள புத்தாக்க திட்டம், தொலைதூர கனவாக மாறிவிடும். இந்த சிக்கலில் இருந்து BSNL வெளியே வர உதவி செய்யும் வகையில், மத்திய அமைச்சரின் தலையீடு தேவை என வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம் தொலை தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும் 
தகவல்: மத்திய/மாநில சங்கங்கள்