இன்று (17.12.2019) BSNL CMD திரு P.K.புர்வார் அவர்களை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணைப் பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும் சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்:-
நவம்பர் மாத ஊதியம்
மேலும் காலதாமதமின்றி 2019, நவம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். CMD BSNL, இதற்கு பதிலளிக்கையில், தற்போதும் BSNL, கடும் நிதி நெருக்கடியை சந்திப்பதாக தெரிவித்தார். தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, எதிர்பார்க்கப்பட்ட வங்கி கடன்கள் இதுவரை வரவில்லை என BSNL CMD பதிலளித்தார். எனினும் 31.12.2019க்குள் நவம்பர் மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார். நாடு முழுவதும் கொண்டாடப்படக் கூடிய ஒரு பண்டிகையான கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்னதாகவேனும் ஊதியம் வழங்க வேண்டும் என சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக அது சாத்தியமில்லை என BSNL CMD தெரிவித்தார்.
ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டவைகள்
ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, சொசைட்டி, வங்கி தவணைகள் உள்ளிட்டவைகள், கடந்த சில மாதங்களாக உரிய மட்டங்களுக்கு செலுத்தாததை சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதே போல ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட சங்க சந்தா தொகைகளும் சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதனால் அன்றாட சங்க நடவடிக்கைகளும் சிரமத்திற்கு உள்ளாக்க படுவதாக தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை உடனடியாக வழங்க அவர்கள் CMDஐ வலியுறுத்தினர்.
விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக CMD உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்கம்