2019 டிசம்பர் மாத ஊதியத்தை, 31.01.2020 அன்று வழங்குவதாக CMD BSNL அவர்கள் BSNLஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் உறுதி அளித்திருந்தார். தற்போது, வங்கி ஊழியர்கள், 31.01.2020 மற்றும் 01.02.2020 ஆகிய இரண்டு தினங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக நமக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் 02.02.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை. எனவே இந்த மூன்று நாட்களும் ஊதிய பட்டுவாடா நடக்காது. இந்த பிரச்சனையை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள், BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 30.01.2020 அன்றே ஊதியம் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்கங்கள்