AGR - பிரச்சனையில் வோடோபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் டாடா டெலி செர்விசஸ் ஆகியவற்றின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
24.10.2019 அன்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வோடோபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் டாடா டெலிசெர்விசஸ் ஆகிய நிறுவனங்கள் மேல் முறையீடு செய்ததை 16.01.2020 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உரிமக்கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவை கணக்கிடுவதற்கு அடிப்படையாக உள்ள ADJUSTED GROSS REVENUE (AGR) பற்றிய விளக்கத்தை இந்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் விரிவு படுத்தி உள்ளது.
இந்த தீர்ப்பின் விளைவாக, வோடொபோன் ஐடியா நிறுவனம் 53,000 கோடி ரூபாய்களும், ஏர்டெல் நிறுவனம் 35,000 கோடி ரூபாய்களும் டாடா டெலிசெர்விசஸ் நிறுவனம் 19,000 கோடி ரூபாய்களும் அரசுக்கு அதிகமாக கட்ட வேண்டி உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், இந்தியாவில் தனது செயல்பாட்டை நிறுத்தி விடப்போவதாக ஏற்கனவே வோடோபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க இணையம்