31.01.2020 அன்று நாடு முழுவதும், 78,569 BSNL ஊழியர்கள் / அதிகாரிகள் விருப்ப ஓய்வில் பணி நிறைவு செய்தார்கள். அனைவரின்,பணி நிறைவு காலமும் சிறப்பாக அமைய, சேலம் மாவட்ட BSNLEU தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. நமது மாவட்டத்தில் 436 தோழர்கள் விருப்ப ஓய்வில், 31.01.2020 அன்று பணி நிறைவு செய்தார்கள்.
04.11.2019 அன்று விருப்ப ஓய்வு விண்ணப்ப கதவுகள் திறக்கப்பட்ட காலம் முதல் ஊழியர்கள் மத்தியில் பல குழப்பங்கள், சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக, விண்ணப்ப படிவங்கள் நூற்றுக்கணக்கில் இருந்த போது அதை பார்த்து திகைத்தனர். சேலம் மாவட்ட சங்கம் தோழர்களின் சிக்கல்களை உணர்ந்து, சங்க வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவினோம்.
விண்ணப்பம் பூர்த்தி செய்ய நமது தோழர்கள் திருச்செங்கோட்டில் தோழர் S . தமிழ்மணி, ஆத்தூரில் தோழர்கள் S . ஹரிஹரன், P . குமாரசாமி, G.R .வேல்விஜய், பரமத்தி வேலூரில் தோழர் R . ரமேஷ், நாமக்கல்லில் தோழர்கள் M .பாலசுப்ரமணியன், K .M .செல்வராஜ், ராசிபுரத்தில் தோழர் R . கோவிந்தராஜ், P .M .ராஜேந்திரன், மேட்டூரில் தோழர்கள் M . கோபாலன், K .P .ராஜமாணிக்கம், ஓமலூரில் தோழர் கௌசல்யன், மெய்யனுரில் தோழர் B . சுதாகரன், சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர்கள் P . ராமலிங்கம், M . விஜயன், M . ரவிச்சந்திரன், S . ஹரிஹரன் என பல தோழர்கள், அயராது உழைத்தனர். விண்ணப்பம் கொடுக்க வருபவர்களுக்கு GM அலுவலகத்தில் தோழர் N . பாலகுமார் உதவி புரிந்தார்.
பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள பிரச்சனைகளை, குறிப்பாக, ரத்த சொந்தங்கள் குடும்ப உறுப்பினர் படிவத்தில் இணைப்பதில் இருந்த சிக்கல்களை தீர்வு காண பல தோழர்களுக்கு உதவினோம். TSM சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட சுமார் 30 தோழர்களின் பிரச்சனைகளுக்கு பல மாவட்டங்களை தொடர்பு கொண்டு தீர்வுக்கு உதவினோம். கடைசியாக 4 தோழர்களுக்கு COMMUNITY CERTIFICATE பிரச்சனை ஏற்பட்ட போது, மாநில சங்கத்தை அணுகி, மத்திய சங்க வழிகாட்டுதலுடன் தீர்வு கண்டோம்.
வர்க்க சிந்தனையோடு நாம் புரிந்த உதவிகளை தோழர்கள் என்றும் நினைவில் வைத்து கொள்வார்கள் என்பது திண்ணம். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்