31.01.2020 அன்று நமது சேலம் மாவட்டத்தில், 436 தோழர்கள் விருப்ப ஓய்வில் பணி நிறைவு செய்தார்கள். அது போக, 8 தோழர்கள் வயது மூப்பு அடிப்படையில் தங்கள் பணி காலத்தை நிறைவு செய்தார்கள்.
இந்த அதிகாரிகள், ஊழியர்களை கௌரவப்படுத்த 31.01.2020 அன்று சேலம் காந்தி ரோடு, PLANNING அலுவலகம் எதிரில் உள்ள T.V.N திருமண மண்டபத்தில் பிரிவு உபசார விழா, நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது.
காலையில் ஊரக பகுதியை சேர்ந்த 201 அதிகாரிகள்/ ஊழியர்களும், மாலையில் நகர பகுதியை சேர்ந்த 243 அதிகாரிகளும், ஊழியர்களும் இரண்டு பிரிவாக கௌரவப்படுத்த
பட்டனர.
காலை, மதியம் இரு வேளையும், BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்களுடன் கலந்து கொன்டோம். அனைவரையும் மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்தினோம்.
31.01.2020 அன்று பணி நிறைவு செய்த அனைவரின் பணி நிறைவு காலமும் சிறப்பாக அமைய, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்