எதிர்ப்பு இயக்கங்களை நடத்த AUAB முடிவு
06.02.2020 அன்று AUABயின் கூட்டம் அதன் தலைவர் தோழர் சந்தேஸ்வர் சிங் தலைமையில் நடைபெற்றது. AUABயில் அங்கமாக உள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
AUAB அமைப்பாளர் தோழர் P.அபிமன்யு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, ஆய்படு பொருட்கள் தொடர்பாக விவரித்தார். ஆழமான விவாதங்களுக்கு பின் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்ட இயக்கங்களை நடத்திட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-
கோரிக்கைகள்
1. 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்கு.
2. ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கிடு.
3. ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு உடனே செலுத்திடு.
4. BSNLன் 4G சேவைகளை உடனடியாக துவங்கிடு.
5. BSNL கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்கிடு.
6. FR 17(A)ன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெற்றிடு.
7. VRS அமலாக்கப்பட்டதன் காரணமாக, ஊழியர்களை தன்னிஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது.
8. ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கு.
போராட்ட இயக்கங்கள்
2. 24.02.2020 அன்று அனைத்து மட்டங்களிலும் உண்ணாவிரதம்.
சேலம் மாவட்டத்தில் இரண்டு இயக்கங்களையும் வெற்றிகரமாக்குவோம்! கோரிக்கைகளை வெல்வோம்!!
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு:
சேலம் மாவட்ட AUAB சார்பாக, அனைத்து கிளைகளிலும், 11.02.2020 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். சேலம் நகர கிளைகள் சார்பாக, 11.02.2020, மதியம், 12.30 மணி அளவில், PGM அலுவலகம் முன்பு நடைபெறும்.