தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடுதொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் 28.01.2020 அன்று நடத்திய தர்ணா போராட்டம் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 1200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், நிரந்தர ஊழியர்களும் இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒப்பந்த முறையில் LABOUR CONTRACT முறையே தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளையும், BSNLன் புத்தாக்கம் தொடர்பாக சங்கங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.
நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
நமது சேலம் மாவட்டத்திலிருந்து 78 தோழர்கள் கலந்து கொண்டோம். தனி பேருந்து, ரயில் மூலம் பயணம் மேற்கொண்டோம். BSNLEU மாவட்ட சங்க அமைப்பு செயலர் தோழர் K . ராஜன், ராசிபுரம் கிளை செயலர் தோழர் P .M .ராஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வழி நடத்தினார்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
TNTCWU தமிழ் மாநில செயலர் விவர அறிக்கை காண இங்கே சொடுக்கவும்