06.02.2020 அன்று ஆத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு வெகுசிறப்பாக நடைபெற்றது. தோழர் S . ஹரிஹரன், மாவட்ட தலைவர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக, சங்க கொடியை மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட உதவி தலைவர் தோழர் P . குமாரசாமி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார்.
ஆய்படு பொருள் மீது செயற்குழு உறுப்பினர்கள் கருத்துக்கள் வழங்கினர். 9வது மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கை மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, தாக்கல் செய்தார். செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
9வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு தோழர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். வரவேற்புக்குழு முடித்து வைக்கப்பட்டது.
VRSக்கு பிந்தைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது, CSC, தொலைபேசி நிலையங்கள், NWOP , SALES, BSS, UDAAN குழுக்களை எவ்வாறு பராமரிப்பது, இயக்குவது, உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, ஊழியர் விருப்பத்திற்கு மாறாக, நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், தள மட்ட இயக்கத்தில் செல்வது, அடுத்த செயற்குழுவில், கிளைகளை மறுசீரமைப்பது, உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஆத்தூர் ஊரக கிளை செயலர் தோழர் G.R. வேல்விஜய், நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். அன்பான உபசரிப்பு, சிறப்பான உணவு, தோரணங்கள், விளம்பரம், சிறப்பான கூட்ட அறை, என நேர்த்தியான ஏற்பாடுகள் செய்திருந்த ஆத்தூர் கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. TNTCWU ஆத்தூர் கிளையின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்