லேண்ட் லைன் மற்றும் ப்ராட் பேண்ட் சேவைகள் வழங்குவது தொடர்பான ஒரு கொள்கையை கார்ப்பரேட் அலுவலகம் ஒரு கடிதம் மூலம் வெளியிட்டுள்ளது. பழுதுகள் சரிபார்ப்பு, PAIR மாற்றம், புதிய லேண்ட் லைன் மற்றும் ப்ராட்பேண்ட் இணைப்புகள் ஆகிய பணிகளுக்கு, MDFல் செய்யப்பட வேண்டிய பரிசோதனை மற்றும் JUMPERING பணிகள் வெளியாட்கள் மூலம் செய்யப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம், BSNL CMDக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தப்பணிகள் நமது TT/ATTக்கள் மூலமே செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அது வெளியாட்களின் தில்லுமுல்லுக்கு பலியாக நேரிடும் என்று BSNL ஊழியர் சங்கம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்