LIC ப்ரீமியம்களை மேலும் காலதாமதமின்றி செலுத்த வேண்டும் என BSNLஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்
2019, மே மாதம் முதற் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட LIC ப்ரீமியம்களை, BSNL நிர்வாகம் LICயில் செலுத்தாமல் இருந்தது. விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் தவணைகள் LICயிடம் செலுத்தப்பட்டிருந்தாலும், பணியில் உள்ள ஊழியர்களின் தவணைகள் இன்னமும் செலுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட LIC தவணைகளை உடனடியாக அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்