நமது மத்திய சங்கம் பத்து மாத காலமாக ஊதியம் கிடைக்காமல் தவித்துக் கொண்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி திரட்டிட, 31.03.2020 அன்று அறைகூவல் விடுத்தது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையை கணக்கில் கொண்டு, 01.04.2020 அன்று அந்த செய்தியினை தமிழில் மொழி பெயர்த்து நமது மாவட்ட சங்க வாட்ஸ் அப் குழுக்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் ஆகியோருக்கு மட்டும் அனுப்பியிருந்தோம்.
உடனடியாக பல தோழர்கள் மாவட்ட சங்கத்தை தொடர்பு கொண்டு, தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர். 02.04.2020 பிற்பகல் 01.30 மணி அளவில் 46 தோழர்கள், ரூ.55,500/- நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அதை மத்திய, மாநில சங்கங்களுக்கு தெரிவித்தோம். மத்திய மாநில சங்கங்கள் தங்கள் இணையத்தில், அந்த செய்தியை வெளியிட்டனர். சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
ஒரே நாளில், நல்ல ஒரு தொகையை வழங்கிய நமது மாவட்ட தோழர்களுக்கும், முயற்சி மேற்கொண்ட தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள் மற்றும் செவ்வணக்கம். இன்னும் பல தோழர்களை அணுகி, தகவல் தெரிவித்து நிதி பெற்று தருமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்