Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 21, 2020

ஒப்பந்த ஊழியர் போராட்டங்களும் - பேச்சு வார்த்தையும்



உலகம் முழுவதும் கொரோனோ பெருந்தொற்று ஆபத்து சூழ்ந்துள்ள இந்த வேலையில், BSNL நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை மேலும் கொடுமை படுத்தும் விதமாக, புதிய outsourcing tender முறையை தமிழ் மாநிலத்தில் அமுல்படுத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். பல மாதங்களாக சம்பளம் நிலுவையுள்ள சூழலில், அவர்களை வேலையை விட்டும் விரட்டும் இந்த கொடிய திட்டத்தை நிர்வாகம் முன்மொழிந்தது.

BSNLEU -TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் பல கட்ட போராட்ட இயக்கங்களை நடத்த அறைகூவல் கொடுத்தது. அதன்படி, நமது மாவட்டத்தில், 08.05.2020, 15.05.2020 ஆகிய தேதிகளில் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.  18.05.2020 அன்று கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு, கருப்பு கொடியை கைகளில் ஏந்தி, கோரிக்கை பதாகைகளை உயர்த்தி பிடித்து, கிளைகளில் இயக்கம் நடத்தினோம். 20.05.2020, நேற்று, மாவட்ட முதன்மை மேலாளர் அலுவலகத்தில் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடத்த அறைகூவல் கொடுத்தோம்.

18.05.2020 சேலம் PGM அலுவலகத்தில் இயக்கம் நடத்தியபின், நமது கோரிக்கைகளை மகஜராக, மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கினோம். 19.05.2020 சேலம் LEO அலுவலகம் சென்று அங்கும் புகார் மனு வழங்கினோம்.

19.05.2020 அன்று மாலை, நமது PGM திரு. வெங்கடசுப்ரமணியம் சேலம் வருகை புரிந்ததை தொடர்ந்து, அவரை சந்தித்தோம். நமது கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தோம். மாநில நிர்வாகத்தின் உத்தரவையும், BSNL நிறுவனத்தின் சூழலையும் PGM விளக்கினார். பல மணி துளிகள் பேச்சு வார்த்தைக்கு பின், கீழ்கண்ட விஷயங்களில், நிர்வாகத்திற்கும் நமது சங்கத்திற்கும் சில பூர்வாங்க புரிதல் ஏற்பட்டது.

அதன்படி,

1. கேபிள் பழுது, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் MPA பிரிவில், முடிந்த வரை ஆட்குறைப்பு செய்யாமல், வேலை பகிர்வு செய்யப்படும். INFRA, HOUSEKEEPING பகுதிகளில் உடனடி பாதிப்பு ஏதும் இருக்காது.

2. நாம் போராடி பெற்ற சலுகைகளான EPF  / ESI உத்தரவாத படுத்தப்படும்.

3. ஊதிய நிலுவை விரைந்து பெற்று தரப்படும்.

இருப்பினும்,  DGM தலைமையில், தொழிற்சங்கம், நிர்வாகம், ஒப்பந்ததாரர் ஆகியோரை கொண்டு, முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இந்த முன்மொழிவுகள் இறுதி படுத்தப்படும்.

அதனை தொடர்ந்து, மாநில சங்க அறைகூவல்படி, நேற்று, 20.05.2020, சேலம் PGM அலுவலகத்தில் திரண்ட நம் தோழர்களுடன் திரளாக சென்று DGM(HR/ADMN) திரு. கந்தசாமி அவர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்தோம். நம் ஒப்பந்த ஊழியர்களிடம் நேற்றைய பேச்சு வார்த்தை முன்னேற்றங்களை DGM விளக்கினார். அதன் அடிப்படையில், போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

தோழர்களே! சில முன்னேற்றங்கள் நமது கோரிக்கைகளில் ஏற்பட்டாலும், நமது பயணம் மிக நீளமானது என்பதை நாம் அறிவோம். அடுத்து நடைபெறவுள்ள பேச்சு வார்த்தைகளில், நாம் வெற்றி பெறுவதற்கான முதல் படியில் அடி எடுத்து வைத்துள்ளோம்.

மூன்று நாட்கள் சமூக இடைவெளியுடன் இயக்கங்கள் நடத்திய கிளை சங்கங்களை இரண்டு மாவட்ட சங்கங்களும் மனதார பாராட்டுகிறது. இன்றைய முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக, இயக்கம் நடத்திய திருச்செங்கோடு கிளைகளுக்கு வாழ்த்துக்கள். 

போராடாமல் பெற்றதில்லை! போராடி தோற்றதில்லை!!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU





































திருச்செங்கோடு