Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 8, 2020

OUTSOURCING-முறையை அமுலாக்காதே! நிலுவை சம்பளத்தை உடனே வழங்கு!!

நமது சங்கத்தின் கடுமையான ஆட்சேபங்களையும், எதிர்ப்பையும் மீறி நிலுவை சம்பளத்தை பற்றி கவலைப்படாமல், ஒப்பந்த ஊழியர் வாழ்வை அழிக்கும், Outsourcing Tender-முறையை அமுலாக்க தமிழகம் முழுக்க முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படும், ஆட்குறைப்பு ஏற்படும், BSNL சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று நாம் விவரித்தும் கூட பல மாவட்ட நிர்வாகங்கள் தமிழ் மாநில நிர்வாகத்துடன் இணைந்து அமுல்படுத்த துடிக்கின்றன. ஒப்பந்ததாரர் security deposit கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை என அவசர கோலத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, அனுமதிக்க முடியாது. நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும் நிலுவை சம்பளத்தை கேட்டும், தமிழகம் முழுவதும் பதினைந்து தோழர்களுக்கு மிகாமல் 08.05.2020 அன்று சமூக இடைவெளியுடன் தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என BSNLEU -TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள் முடிவு செய்து, 06.05.2020 அன்று போராட்ட அறைகூவல் கொடுத்தது. 

நமது, சேலம் மாவட்ட சூழலுக்கு ஏற்ப, கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்தோம். தனி மனித இடைவெளியுடன், 08.05.2020 அன்று நமது கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சேலம் நகர கிளைகள் சார்பாக, செவ்வை தொலைபேசி நிலையத்திலும், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

குறிகிய கால அவகாசத்தில் கொடுக்கப்பட்ட அறைகூவலை வெற்றிகரமாக்கிய கிளைகளுக்கு BSNLEU -TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, புரட்சிகரமான வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 


சேலம் நகர கிளைகள் 










திருச்செங்கோடு  






பரமத்தி வேலூர்  






ராசிபுரம்