நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிராக மூன்று நாட்கள் வேலை நிறுத்தம். போராடும் சங்கங்களுக்கும், சம்மேளனங்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் ஆதரவு.
நிலக்கரித் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை, நரேந்திர மோடி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய அரசாங்கம், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலக்கரி சுரங்கங்களை திறந்து விட்டுள்ளது. 1970களில் தேசிய மயமாக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் தனியாருக்கு தாரை வர்ப்பது தானே தவிர வெறொன்றுமில்லை. இந்திய கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் நிலக்கரி சுரங்கங்களை கொள்ளையடித்திட மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு எதிராக நிலக்கரித்துறையில் உள்ள அனத்து சங்கங்களும், சம்மேளனங்களும் 2020, ஜூலை 2 முதல் 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் செல்ல உள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தை BSNL ஊழியர் சங்கம் ஆதரிப்பதோடு, போராடும் நிலக்கரித்துறையில் உள்ள சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களுக்கு, தனது ஆதரவையும் முழுமையாக தெரிவித்துக் கொள்கிறது. நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்கும் தனது முடிவுகளை அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை BSNL ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்