Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 22, 2020

சமூக இடைவெளியை கடைபிடித்து கிளைகளில் தர்ணா

பழனியில் 3-வது நாளாக இஸ்லாமியர்கள் ...
26.06.2020, வெள்ளிக்கிழமை


26.06.2020 அன்று சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா போராட்டத்தை நடத்திட வேண்டும் என 15.06.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சஙத்தின் மத்திய செயலக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நமது மாவட்டத்தில், கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 26.06.2020 அன்று கிளைகளில் தர்ணா போராட்டம் நடத்த பட வேண்டும். 


கோரிக்கைகள் 

1. BSNL நிறுவனம் 4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும் 

2. BSNLன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் 

3. BSNL நிர்வாகத்தால், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் 

என வலியுறுத்தி இந்த தர்ணாவிற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் சக்தியாக கிளைகளில் நடத்த பட வேண்டும். இயக்கத்தில் பங்கு பெறும் தோழர்கள், கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கோரிக்கை பதாகைகளை தர்ணா பந்தலில் வைத்திட வேண்டும். படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்புமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல் பலகையில் வெளியிட மாவட்ட சங்க  விவரமான சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்