ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவ அட்டையின் (MRS Card) காலத்தை 30.09.2020 வரை நீட்டிக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்கப்படுள்ள மருத்துவ அட்டையின் செல்லத்தக்க காலத்தை 30.06.2020 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டித்து, கார்ப்பரேட் அலுவலகம், ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது.
எனினும், பல மாநிலங்கள் இந்த உத்தரவை சரியாக புரிந்துக் கொள்ளாமல், 30.06.2020க்குள், இந்த அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென ஓய்வு பெற்ற தோழர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். கொரோனா தொற்று அபாயத்தின் காரணமாக நடமாடுவதில் உருவாக்கப்பட்டுள்ள தடைகளின் காரணமாக, பல இடங்களில், புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நிரப்பி தருவதில் பல சிரமங்கள் உள்ளன. இவற்றின் காரணமாக, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ அட்டையின் செல்லத்தக்க காலத்தை 30.09.2020 வரை நீட்டிக்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், BSNL கார்ப்பரேட் அலுவலகத்தின் GM(Admn) அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்