Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 8, 2020

16.07.2020 அன்று உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திடுக!

Jakdo-Geo demonstration in Sivaganga || சிவகங்கையில் ...


16.07.2020 அன்று உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட, 06.07.2020 அன்று நடைபெற்ற AUAB கூட்டம், BSNL ஊழியர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. அன்றைய தினம் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

06.07.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கோரிக்கைகளும், போராட்ட இயக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

போராட்ட இயக்கங்கள்:-

1) அனைத்து ஊழியர்களும் 16.07.2020 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து, 4G டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், BSNLன் 4G சேவைகள் துவங்க உருவாக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராகவும், 16.07.2020 அன்று மதிய உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.

2) BSNLன் 4G சேவைகள் விரைவில் துவங்கப்பட வேண்டும் என்கின்ற விஷயத்திலும் விரைவில் BSNL புத்தாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற விஷயத்திலும் தலையிட வேண்டும் என 13.07.2020 முதல் 31.07.2020 வரையிலான காலத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மனு கொடுப்பது. 

3) 4G சேவைகளை BSNL விரைவில் கொடுக்க வேண்டும் என்றும், BSNLன் புத்தாக்க திட்டத்தில் கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளை அமலாக்க வேண்டும் என்றும் 05.08.2020 அன்று ட்விட்டர் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

கோரிக்கைகள்:-

I) 4G சேவைகளை வழங்க உடனடியாக BSNLக்கு அனுமதி வழங்க வேண்டும்.

அ) 4G சேவை தரவல்ல BTSகளை உடனடியாக மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை BSNL, உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஆ) VIII.4 கட்ட டெண்டர் அடிப்படையில், கூடுதலான 4G கருவிகளை வாங்குவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும்.

இ) புதிய கருவிகள் வாங்குவது மற்றும் மேம்படுத்துவதில், BSNL மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் எந்த ஒரு பாரபட்சமும் காட்டக் கூடாது. 

II) BSNLன் புத்தாக்க திட்டத்தில் உள்ள பாண்டுகள் வெளியிடுவதற்கு அரசு உத்தரவாதம் தருவது உள்ளிட்ட முடிவுகளை அரசாங்கம் உடனடியாக அமலாக்க வேண்டும்.

III) சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை BSNL நிர்வாகம் அவசர கதியில் மேற்கொள்ள வேண்டும். 

IV) மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படுவதை நிர்வாக்ம் உறுதி செய்ய வேண்டும்.

V) கொரோனா தொற்று அபாய காலகட்டத்தில், ஊழியர்களுக்கு EMPANELLED மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைக்கு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு நிர்வாகம் 10 லட்ச ரூபாய் நிதி உதவி தர வேண்டும். (தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி தபால் துறை இது போன்ற திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது).

நமது மாவட்டத்தில், 16.07.2020 அன்று, கிளைகளில், உணவு இடைவேளையில், கருப்பு  கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விரிவான AUAB அறிக்கை (தமிழாக்கம்) காண இங்கே சொடுக்கவும்