BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் நீண்ட கால கடன் பத்திரங்களுக்கு அரசின் SOVERIGN GUARANTEE வழங்கும் கடிதத்தை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் நீண்ட கால கடன் பத்திரங்களுக்கு அரசின் SOVERIGN GUARANTEE வழங்கும் கடிதத்தை நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான இலாகா 08.07.2020 அன்று வெளியிட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள 15,000 கோடி ரூபாய்களுக்கான உத்தரவாதத்தில் BSNLக்கான பங்கு 8,500 கோடி ரூபாய்கள்.
அந்தக் கடிதத்தின் பாரா எண் iiiல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:-
“அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் மாற்றத்தக்கதல்ல. இந்த நிறுவனத்தின் சொந்தத்தை இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாற்றப்பட்டது என்றால் இந்த உத்தரவாதம் ரத்தாகிவிடும்”
மேலே சொல்லப்பட்டுள்ள பிரிவிலிருந்து, BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் உரிமையாளர்களை மாற்றும் திட்டம் அரசின் சிந்தனையில் தொடர்ந்து உள்ளது என்பதை தெளிவாக்குகிறது.
வேறு வார்த்தைகளின் சொல்லவேண்டும் என்றால், BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் அரசின் சிந்தனையில் தொடர்ந்து இருக்கிறது என்பதை இந்த வரிகள் தெளிவாக்குகின்றன.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்கம்
நிதி அமைச்சக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்