நமது கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த 04.06.2020 முதல் நமது சேலம் மாவட்டத்தில், JOB CONTRACT திட்டத்திலான அவுட்சோர்சிங் முறையில் வெளிப்புற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தை 12 கொத்துக்களாக (CLUSTERS) பிரித்து, 2 ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டன. 10 கொத்துக்களை டெண்டர் எடுத்த நெவிடேல் என்ற நிறுவனம், 50 நாட்களாக நமது ஒப்பந்த தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, கூலி கொடுக்க தாமதம் செய்து கொண்டிருக்கிறது.
இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக, பல முறை அந்த நிறுவனத்திடம் பேசியும் பலன் இல்லை. மாவட்ட நிர்வாகமோ எதை பற்றியும் கண்டுகொள்ளாமால் அலட்சிய போக்கை கடைபிடிக்கிறது.
இதுபோக, INFRA தோழர்களுக்கு 7 மாதங்கள், HOUSEKEEPING தோழர்களுக்கு 14 மாதங்கள், பழைய முறையிலான கேபிள் தோழர்களுக்கு 9 மாதங்கள் என சம்பள நிலுவை அதிகரித்து கொண்டே போகிறது.
இந்த அவலங்களையெல்லாம் கண்டித்து, தள மட்ட போராட்டத்தில் உடனடியாக குதிப்பது என இரண்டு மாவட்ட சங்கங்களின் மையமும் கூட்டாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், 28.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் இரண்டு சங்கங்கள் சார்பாக நடத்த பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை முழுமையாக திரட்டி, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
புதிய டெண்டர் முறையில் ஊதியம் பெற்ற, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி தோழர்களும் பிற கோரிக்கைகளுக்காக, ஆதரவு ஆர்ப்பாட்டம், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, சமூக இடைவெளியியை கடைபிடித்து போராட்டம் நடத்த வேண்டும். படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU
குறிப்பு: 27.07.2020 மதியம், மாவட்ட பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை மகஜர் வழங்கியுள்ளோம். நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவதாக தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், போராட்டத்தை சக்தி மிக்கதாக கிளைகளில் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.