BSNL 4G சேவை வழங்காததற்கு, BSNL நிர்வாகத்தின் ஒட்டு மொத்த தோல்வி தான் காரணமே தவிர வேறு எதுவுமில்லை.
ஏற்கனவே BSNL வசம் 49,300, 4Gக்கு தகுதியுடைய BTSகள் உள்ளன. இவற்றை 4G- BTSகளாக மேம்படுத்தியிருக்க முடியும். அத்துடன் VIII-4 கட்ட டெண்டரில் கூடுதல் உத்தரவு பிறப்பித்து, மேலும் 15,000 BTSகளை BSNL வாங்கியிருக்க முடியும். இவ்வாறாக, BSNL 64,300 BTSகளை தயார்படுத்தியிருக்க முடியும். அவற்றின் மூலம், அகில இந்திய அளவிலான 4G சேவைகளை BSNL வழங்கியிருக்க முடியும்.
இவை நடக்காமல் இருந்தது என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம். நடைபெறாமல் போனதற்கு BSNL நிர்வாகத்தின் ஒட்டு மொத்த
செயல்பாடின்மையே காரணம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்கங்கள்