29.07.2020 அன்று ராசிபுரம் தொலைபேசி நிலையத்தில், ராசிபுரம் கிளை செயலர் தோழர் P . M . ராஜேந்திரன், அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு, தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர், தலைமை தாங்கினார்.
BSNLEU தமிழ் மாநில சங்கம் சார்பாக தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவர் வாழ்த்துரை வழங்கினார். SNEA சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, தோழர் பொன்ராஜ், மாவட்ட பொருளர், AIBSNLEA மாவட்ட சங்கம் சார்பாக, தோழர் V. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
CITU நாமக்கல் மாவட்டக்குழு சார்பாக தோழர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU சேலம் மாவட்டம் சார்பாக தோழர் S . ஹரிஹரன், மாவட்ட தலைவர், தோழர் E . கோபால், மாவட்ட செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, தோழர் P .M .ராஜேந்திரன் ஏற்புரை வழங்கினார். தோழர் K . தங்கவேல் நன்றி கூறி விழாவை முடித்து வைத்தார்.
BSNLEU - TNTCWU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், தோழர் PMR குடும்பத்தார், நண்பர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்